மதுரையில் சமூக இடைவெளி பின்பற்றப்படுகிறதா, பத்து பறக்கும் படை அமைப்பு

மதுரையில் கடைகள், வணிக நிறுவனங்கள், ஹோட்டல்களில் சமூக இடைவெளி பின்பற்றப்படுகிறதா, என கண்காணிக்க பத்து பறக்கும் படைகளை மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் நியமித்துள்ளார். இந்த பறக்கும் படையில் வருவாய்த் துறை, காவல்துறை, உள்ளாட்சித்துறை அலுவலர்கள் இடம் பெற்றுள்ளனர்.இந்த பறக்கும் படையினர், தினசரி காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7.45 மணி வரையிலும், இந்த பறக்கும் படையினர் கண்காணிப்பர். சமூக இடைவெளியை பின்பற்றாத கடைகளை சீல் செய்யவும் இவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த குழுவை மாவட்ட உயர் அதிகாரிகள் வழிநடத்துவர். இவ்வாறு மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!