பாம்பு கடித்து ஏட்டு இறந்தார்

சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் பாண்டியன் நகர் பகுதியைச் சேர்ந்த செக்கான்கருப்பன் (51) . இவர் மதுரை கரிமேடு காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார்.  வேலை முடித்து மதியம் வீட்டுக்கு வந்துள்ளார் . மாலை தோட்டத்திற்கு சென்ற பொழுது அவரை பாம்பு கடித்து உள்ளது. ஆபத்தான நிலைமையில் செக்கான்கருப்பன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் . அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு இறந்தார் இவருக்கு மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!