மருத்துவமனை ஊழியர்களுக்கு ஹோமியோபதி மருந்துகள். அமைச்சர் உதயகுமார் வழங்கினார்.

திருப்பரங்குன்றம் அருகே அரசு தோப்பூர் காச நோய் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 16 கொரானா நோயாளிகளுக்கு மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் என 100 நபர்களுக்கு கபசுரக் குடிநீர் பொடி, ஆடாதோடை மணப்பாகு, தாளி சாதி சூரண மாத்திரை ஆகிய சித்தா மற்றும் ஹோமியோபதி மருந்துகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது .இதில் அமைச்சர் ஆர் பி உதயகுமார் மதுரை மாவட்ட ஆட்சியர் வினய், மதுரை அரசு மருத்துவமனை முதல்வர் சங்கு மணி மற்றும் தோப்பூர் அரசு காசநோய் மருத்துவமனை முதல்வர் காந்திமதிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேசும்போது

கொரோனா நோய்தொற்று காலத்தில் மதுரை மாவட்டம் முன்மாதிரி மாவட்டமாக இருக்கிறது.தொப்பூர் அரசு காசநோய் மருத்துவமனைக்குள் நுழைந்தால் பசுமையான இடங்களை பார்த்து நோய்கள் தீர்ந்துவிடும்.சித்தா, ஹோமியோபதி நம்மளுக்கு கிடைத்த பொக்கிஷம்.மருந்து இல்லாமல் உலகம் போராடிக் கொண்டிருக்கிறது.கபசுரக் குடிநீர் பொடி, ஆடாதோடை மணப்பாகு, தாளி சாதி சூரண மாத்திரை இந்த ஹோமியோபதி மற்றும் சித்தா மாத்திரைகள் உட்கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் அதிகரித்து நோய்த் தொற்றில் இருந்து விடுபட உதவுகிறது.அலோபதியுடன் ஹோமியோபதி சித்த மருத்துவத்தை சேர்ப்பதன் மூலம் நல்ல தீர்வு கிடைக்கப் பெற்று வருகிறது.முதன்முறையாக மதுரை மாநகரில் அரசு தோப்பூர் காசநோய் மருத்துவமனையில் உள்ள “ஏ” சின்டமேட்டிக்  கொடுக்கப்படுகிறது மேலும் மருத்துவமனை ஊழியர்கள் அனைவருக்கும் இந்த சித்தா மற்றும் ஹோமியோபதி மருந்துகள் தரப்பட உள்ளது என அமைச்சர் கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!