ABVP தேசிய மாணவர் அமைப்பின் மதுரை கிளை சார்பாக
முனிச்சாலை சந்திப்பு அருகில் இந்திய சீன எல்லையில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சீன அரசின் அக்கிரமங்களை கண்டிக்கும் வகையில் சீன தேசிய கொடியும் சீன அதிபரின் உருவபடமும் தீயிட்டு எரிக்கப்பட்டது.சீனாவிற்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இதில் ABVP யின் மாநில இணை செயலாளர் கோபி தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் வெங்கட் ராஜ் அலுவலக செயலாளர் கருப்பசாமி சட்டக்கல்லூரி பொறுப்பாளர் பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


You must be logged in to post a comment.