. மதுரை மேலமடை பகுதியைச் சேர்ந்த சலூன் கடை நடத்தி வரும் மோகன் . தன்னுடைய மகளின் எதிர்காலத்திற்காக சேமித்து வைத்த 5 லட்ச ரூபாய் பணத்தை ஊரடகால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவியை சம்பவம் எதிரொலியாக பிரதமர் நரேந்திர மோடி மங்கி பாத் நிகழ்ச்சி மூலம் மோகன் மற்றும் அவருடைய மகள் நேத்ரா செயலை வெகுவாக பாராட்டி இருந்தார், இந்த நிலையில் பல்வேறு தொழிலதிபர்களும் நிறுவனங்களும் தாங்களாக முன்வந்து சலூன் கடை மோகன் அவர்களின் மகள் நேத்ராவின் எதிர்காலத்திற்காக அன்பளிப்பாக பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்கள்,இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்தவர் முருகேசன் டி பி நோய் காரணமாக கால்கள் செயலிழந்த நிலையில் மிகவும் வறுமையில் வாடுவதாக மதுரையை சேர்ந்த சலூன் கடை மோகனிடம் உதவி கோரி கடிதம் எழுதிருந்தார்,இந்நிலையில் அவரை வரவழைக்க ஏற்பாடு செய்து தனது கடையிலேயே மகள் நேத்திர அவருக்கு வந்த அன்பளிப்பு இருந்து ரூபாய் 25 ஆயிரம் மதிப்புள்ள காசோலையை முருகேசனின் மருத்துவ செலவிற்காக நேத்ராவின் குடும்பம் வழங்கியது, மேலும் ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி பருப்பு காய்கறிகளை வழங்கியுள்ளார். ஏற்கனவே ஐநாவின் கிளை அமைப்பான யூஎன் ஏஎடிபி உலக ஏழை மக்களின் நல்லெண்ண தூதராக அறிவித்திருந்த நிலையில் வறுமையில் வாடிய இளைஞரின் எதிர்காலத்திற்கு மருத்துவ செலவிற்கு தனக்கு வந்த அன்பளிப்பு பணத்தை நேத்திரா உதவியை சம்பவம் அனைவரது மனதிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.