அழகு பெறுகிறது தமுக்கம் மைதானம். பழமை மாறாமல் புதுப்பிக்க கோரிக்கை..

மதுரை தமுக்கம் மைதானம் புதுப்பிக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.மதுரையின் முக்கிய அடையாளமான தமுக்கம் மைதானம் பண்டைய ஆட்சி காலத்தில் மற்போர் புரியும் இடமாக இருந்தது. தற்போது அருகே உள்ள காந்தி மியூசியம் அரசி ராணி மங்கம்மாளின் அரண்மனையாக இருந்துள்ளது. இந்த அரண்மனையின் மாடத்தில் இருந்து தமுக்கம் மைதானத்தில் நடைபெறும் வீர, தீரபோட்டிகளை அரசியும் மற்றவர்களும் பார்த்து மகிழ்வர்.அதன் பின் இந்த மைதானம் ஒரு முக்கிய வரலாற்று சின்னமாக மாறிப் போனது. அதன் பின் அரசியல் மாநாடு, உலகத் தமிழ் மாநாடு போன்ற பல முக்கிய நிகழ்வுகள் இங்கே நடந்துள்ளன . இங்கே வந்து மேடையேறி பேசாத அரசியல் தலைவர்களே இல்லை எனும் அளவிற்கு இங்கு அனைத்து கட்சி கூட்டங்களும் இங்கே நடந்துள்ளன.

மதுரையின் முக்கிய அம்சமான சித்திரைத் திருவிழாவின் முத்திரை நிகழ்வான பொருட்காட்சியும் ஆண்டு தோறும் இங்கே தான் நடைபெறும். தொழில் பொருட்காட்சி, வர்த்தக கண்காட்சி, ஆன்மீக மாநாடுகள் என அனைத்தும் இங்கே தான் நடக்கும்.இவ்வளவு பெருமை வாய்ந்த மைதானம், இடிக்கப்பட்டு, புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.துரிதமாக பணிகள் நடைபெற்ற போதிலும், பழமை மாறாமலும், வரலாற்று பதிவுகளையும், இங்கே உருவாக்க வேண்டும் என்பதே மதுரை வாசிகளின் வேண்டு கோளாக உள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!