ராணுவ வீரர் பழனி உடல் மாலை 5 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் மதுரை வருகிறது.

லடாக் கல்வயான் பகுதியில் நடந்த சீன ராணுவ சூட்டில் ராமநாதபுரம் மாவட்ட ராணுவ வீரர் பழனி பலியானார்.இவரது உடல் டெல்லியிலிருந்து விமானப்படை சிறப்பு விமானம் மூலம் -மதுரைக்கு மாலை 5 மணி அளவில் கொண்டுவரப்படுகிறது இதனை அடுத்து அவர்கள் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கார்களில் அழைத்து வரப்படுகின்றனர்.மதுரை விமான நிலையத்தில் இருந்த ராணுவ வீரர் பழனியின் உடலுக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் போலீஸ் அணிவகுப்பு மரியாதை செலுத்த உள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா கடுக்கலூரை சேர்ந்த ராணுவ வீரர் பழனி (வயது40) .இந்திய – சீன எல்லை பகுதியான லடாக்கின் கல்வயான் பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் பலியானார். அவரது உடல் சொந்த ஊரான கடுக்கலூருக்கு இன்று மாலை கொண்டுவரப்படுகிறது ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!