லடாக் பகுதியில் நடந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம். ஆத்மா சாந்தியடைய மதுரை விக்டோரியா எட்வர்டு மன்றம் மற்றும் பாரதி யுவகேந்திரா சார்பாக தீப அஞ்சலி

இந்தியா சீனா எல்லையான லடாக் பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே நடந்த போர் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.இதில் தமிழ்நாட்டை சேர்ந்த ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை சேர்ந்த பழனி என்பவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.அன்னாரது உடல் விமானம் மூலம் மதுரை மதுரை வந்து சொந்த ஊரான திருவாடானை பகுதிக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.

போரில் வீரமரணம் அடைந்த நமது இந்திய ராணுவ வீரர்களின் ஆத்மா சாந்தியடைய மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள விக்டோரியா எட்வர்டு மன்றம் மற்றும் பாரதி யுவகேந்திரா சார்பாக செயலாளர் இஸ்மாயில் தலைமையில் நெல்லை பாலு முன்னிலையில் இரண்டு நிமிடம் மெழுகுவர்த்தி ஏந்தி தீப அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தேசிய ஒருமைப்பாட்டை உணர்த்தும் வகையில் பாரதி தேசிய பேரவை தலைவர் ஜான் மோசஸ், நஜ்முதீன் பழனி வழக்கறிஞர் நவ்ஷாத் ஜெரோம் ஜெயக்குமார் சர்வோதயா புருஷோத்தமன் சீனிவாசன் மகாலிங்கம் உள்ளிட்ட பலர் நமது தேசத்திற்காக உயிரிழந்த ராணுவ வீரர்களுக்காக மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!