திருமங்கலத்தில் தியாகி விஸ்வநாத தாஸ் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து, மரியாதை

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்தவர் தியாகி விஸ்வநாத தாஸ். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் துணிச்சலாக எதிர்த்தவர் விஸ்வநாததாஸ். மருத்துவர் சமூகத்தை சார்ந்த அவர் நாடகங்கள் மூலமாக சுதந்திர உணர்ச்சியை மக்களுக்கு ஊட்டினார். கொக்கு பறக்குது, வெள்ளை கொக்கு பறக்குது என்ற பாடல் அவரது நாடகத்தில் புகழ் பெற்றது. இந்த பாடல் மூலம் வெள்ளையர்களை கடுமையாக தாக்கினார். இது போன்று வெள்ளையர்களுக்கு எதிராக பாடல்கள் இயற்றியதால், ஆங்கிலேயர்கள் அவருக்கு சிறை தண்டனை வழங்கினர். இந்த வீரமிக்க தியாகியின் , 134 வது பிறந்த நாளை யொட்டி  திருமங்கலத்தில் உள்ள அவரது இல்லத்தில் உள்ள தியாகி விஸ்வநாத தாஸ் சிலைக்கு மதுரை மாவட்ட கலெக்டர் டி. ஜி.வினய் மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் தங்கவேல், திருமங்கலம் தாசில்தார் தனலட்சுமி ஆகியோர் உள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!