கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் கடந்த 90 நாட்களுக்கும் மேலாக பொது முடக்கம் அமலில் உள்ளது. இந்த நிலையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகள் அறிவித்தது உள்ளார்கள். ஆனால் இதுவரையிலும் வாகன ஓட்டுனர் பயிற்சி பள்ளி துவங்க மத்திய மாநில அரசுகள் அனுமதி கொடுக்கவில்லை …. குறிப்பாக மதுரை மாவட்டத்தில் மட்டும் வட்டார போக்குவரத்து கழகம் மதுரை தெற்கு மதுரை வடக்கு மதுரை மத்தி மேலூர் வாடிப்பட்டி உசிலம்பட்டி திருமங்கலம் உள்ளிட்ட வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளன. இதில் மதுரையில் மட்டும் 150க்கும் மேற்பட்ட வாகன ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் சுமார் 350 பயிற்சி ஆசிரியர்கள் குடும்பங்கள் கடந்த மூன்று மாதங்களாக எந்தவிதமான வருமானமும் இல்லாமல் வாடி வருவதாகவும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர் . மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியாளரிடம் பலமுறை மனு கொடுத்தும் எவ்வித பலனும் பயனும் ஏற்படவில்லை எனவும் ஏன் எங்களை மட்டும் பாராமுகமாய் பார்ப்பது ஏன் எனவும் உடனடியாக ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியை திறப்பதற்காக அனுமதி வழங்க வேண்டும் எனவும் பல பயிற்சி முடித்து ஓட்டுனர் உரிமத்திற்கான காத்திருப்பதாகவும் பலர் பாதியில் பயிற்சியை நிறுத்தி உள்ளதாகவும் ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். உடனடியாக மத்திய மாநில அரசுகள் உங்கள் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து உடனடியாக ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியை இயக்க அனுமதி வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.