மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள பைக்காரா அருகே முத்துப்பட்டி சேர்ந்தவர் திராவிடச் செல்வம் (48). இவரது மனைவி தமிழ்ச்செல்வி மற்றும் சிவச்சந்திரன் என்ற மகனும் பிரியா என்ற மகளும் உள்ளனர். இரவு திராவிடச் செல்வம் பைக்ர ரயில்வே கேட் அருகே பெட்ரோல் பின்புறமுள்ள ஊரணி அருகே கொலை செய்யப்பட்டு கிடந்தார்.கழுத்து, நெஞ்சு, வயற்றில் கத்திகுத்து விழுந்துள்ளது. சம்பவ இடத்துக்கு விரைந்த மதுரை சுப்பிரமணியபுரம் காவல் ஆய்வாளர் கலைவாணி இணை ஆணையாளர் கார்த்திக் திலகர் திடல் உதவி ஆணையாளர் வேணுகோபால் தடய அறிவியல் துறை உதவி கண்காணிப்பாளர் கண்ணன் சம்பவ இடத்தில் தடயங்களை ஆய்வு செய்தார். தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் இதுகுறித்து சுப்பிரமணியபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.