மதுரை மாவட்டம் தெற்கு மாசி வீதி பகுதியில் 16/06/2020 நள்ளிரவு 1/30 மணி அளவில் மின்சார கசிவு காரணமாக ஒரு வீட்டில் தீப்பிடித்து எரிவதாக மதுரை தீயணைப்பு துறைக்கு தகவல் கிடைக்கவே சம்பவ இடத்திற்கு விரைந்து பிளைவுட் கல்லால் ஆன வீட்டில் மேல் பகுதியில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது துரிதமாக செயல்பட்டு மற்ற பகுதிகளுக்கு தீ பரவாமல் தீயை அணைத்தனர். முதல்கட்ட விசாரணையை மின்கசிவு காரணமாக தீ விபத்து நடந்திருக்கலாம் என தெரியவருகிறது .நள்ளிரவு நேரத்தில் ஏற்பட்ட தீ விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.