மதுரை கள்ளிக்குடி அடுத்த உவரியை சேர்ந்தவர் திருசங்கு குமரன் ( 35). இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சாலை
ஈஸ்வரி (23) என்பவருடன் திருமணம் நடந்தது. ஈஸ்வரி இப்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார்.இந்த நிலையில் திருசங்குகுமரன் சம்பவத்தன்று காலை வீட்டில் இருந்து வெளியில் புறப்பட்டுச் சென்றார். அதன்பிறகு இவர் வீடு திரும்பவில்லை.எனவே மனைவி சாலை ஈஸ்வரி கணவரை தேடி அலைந்தார். அப்போது உவரி காலனி கிணற்றில் திரிசங்கு குமரன் பிணமாக மிதப்பதாக தகவல் கிடைத்தது.இதையடுத்து சாலை ஈஸ்வரி மற்றும் உறவினர்கள் பதறியடித்துக்கொண்டு சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு திருசங்கு குமரன், உறவினர் சங்கரேஸ்வரனுக்கு சொந்தமான தோட்டத்து கிணற்றில் கிணற்றில் பிணமாக மிதப்பது தெரியவந்தது


You must be logged in to post a comment.