மதுரை மாநகரட்சி சார்பில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தீவிர தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சிம்மக்கல் வடக்கு வெளி வீதியில் ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் ஆட்டோமொபைல் நிறுவனங்களில் சோதனை மேற்கொண்டனர். வடக்கு வெளி வீதி பகுதியில் இயங்கி வரும் பிரபல ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்தின் பணியாளர் ஒருவருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டதாகவும் தெரியவருகிறது வாடிக்கையாளர்களும் சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமல் விற்பனை செய்ததது சோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்நிறுவனத்திற்கு மதுரை மாநகராட்சி அதிகாரிகள்.கிருமிநாசினி அடித்து பின் நேற்று காலை 11 மணியளவில் சீல் வைத்தனர். மதுரை மாநகராட்சி அதிகாரிகளின் அதிரடி சோதனையால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.