தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் வருகிற19ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை அரசாங்கம் முழு ஊரடங்கை அறிவித்து உள்ளது.இதனால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், நோயில் இருந்து தப்பி பிழைப்பதற்காக, தென்மாவட்டங்களுக்கு செல்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இவர்களில் பலருக்கும் இபாஸ் கிடைப்பது இல்லை. எனவே அவர்கள் போலி திருமண அட்டை, டுப்ளிகேட் இபாஸ் மற்றும் சட்டவிரோத பயணம் வாயிலாக தென் மாவட்டங்களுக்கு செல்வது தெரியவந்து உள்ளது.சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு இரண்டு பேருந்துகளில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் புறப்பட்டு வந்தனர். அப்போது அவர்களின் இபாஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதில் அவர்கள் கொண்டு வந்தது போலி இபாஸ் என்பது தெரியவந்து உள்ளது.
மதுரை மாவட்டத்துக்கு கடந்த ஜூன் 1-ந் தேதி முதல் 15ம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் இபாஸ் கோரி 37 ஆயிரத்து 522 விண்ணப்பங்கள் வந்து உள்ளன. இதில் 20 சதவீதம் சென்னையிலிருந்து வந்தவை என்பது இங்கு குறிப்பிடத்தக்க அம்சம்.இந்த நிலையில் ஜூன் 6-ம் தேதி வரை 1587 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் தரப்பட்டது. ஆனால் ஜூன் 15-ந்தேதியில் 52 விண்ணப்பங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.
மதுரை மாவட்ட சோதனைச் சாவடிகளில் இபாசை பரிசோதனை செய்வதற்காக கியூ ஆர் ஸ்கேனர் எனப்படும் நவீன சாதனங்கள் தரப்பட்டு உள்ளன.இது தவிர அங்கு பரிசோதனை செய்யும் ஊழியர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.இது தவிர மதுரை மாவட்டத்தில் கிராமம் மற்றும் வார்டு வாரியாக விழிப்புணர்வு குழுக்கள் விழிப்புணர்வு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டது. இவர்களின் வாயிலாக கிராமத்து சாலைகள் மூலம் சட்டவிரோதமாக வரும் வாகனங்களை சோதனை செய்யும் பணிகளில் கிராம நிர்வாக அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 398 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் 90 சதவீதம் பேர் சென்னையில் இருந்து வந்தவர்களால் பரவியது என்பது இங்கு குறிப்பிடத்தக்க அம்சம்.சென்னையில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில் தினமும் 200 முதல் 300 பேர் வரை இ பாஸ் கோரி விண்ணப்பித்து வருகின்றனர்.இதில் மாவட்ட நிர்வாகம் குறைந்தபட்சமாக 40 பேருக்கு மட்டுமே பல்வேறு சோதனைகளுக்கு பிறகு அனுமதி கொடுத்து வருகிறது.
தமிழகத்தில் முழு ஊரடங்கு காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போலி திருமண அட்டை, டூப்ளிகேட் இபாஸ் மற்றும் சட்டவிரோதமாக தென் மாவட்டங்களுக்கு புறப்பட்டுச் செல்வது அரசாங்கத்தை கவலை அடைய செய்து உள்ளது.இதனை தடுக்கும் வகையில் மாவட்ட அதிகாரிகள், அந்தந்த சோதனைச் சாவடிகளில் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.