மதுரையில் 10 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த 56 வயது முதியவர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது.

மதுரை அரசரடி பகுதியைச் சேர்ந்தவர் 56 வயது முதியவர் ஜஹாங்கீர். இவருடைய உறவினர் வீடு அதே பகுதியில் உள்ளது, இந்த நிலையில் உறவினர் வீட்டிற்கு அவ்வபோது வந்து சென்ற முதியவர் அந்த வீட்டிற்கு அருகே விளையாடிக்கொண்டிருந்த 10 வயது சிறுமியை அழைத்து பலமுறை பாலியல் வன்புணர்வில் சீண்டலில் ஈடுபட்டுத்தியுள்ளார்,இந்த நிலையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு சிறுமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தபோது சிறுமியை நீண்ட நாட்களாக பாலியல் வன்புணர்வு ஆளாக்கப்பட்டது தெரிய வந்தது,அதனை தொடர்ந்து சிறுமியின் நடத்திய விசாரணையில் பக்கத்து வீட்டிற்கு வந்த 56 வயது முதியவரான ஜஹாங்கீர் சிறுமியை அடிக்கடி யாரும் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் வன்புணர்வு செய்தது தெரிய வந்தது,அதனை தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் மதுரை மாநகரத்திற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையிர் ஜஹாங்கீர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்,10 வயது சிறுமியை மாதக்கணக்கில் பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!