கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க ரூ 25 லட்சம் மதிப்பிலான கொரோனா பரிசோதனை உபகரணங்கள் மதுரை மேற்கு ரோட்டரி சங்கம் சார்பில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் கொரோனா சிறப்பு மருத்துவமனைக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முன்னிலையில் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட ஆட்சியர் வினய், மாநகராட்சி ஆணையாளர் விசா கன் மற்றும் நெல்லை பாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்,
கொரோனா பாதிப்பு இது போன்ற பேரிடரை இதுவரை உலகம் சந்தித்ததில்லை.கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட கடைசி மனிதன் இருக்கும் வரை இல்லை கொரோனாவின் கடைசி வைரஸை அழிக்கும் வரை கொரோனா தடுப்பில் நம் பணி தொடரும்.இது வீட்டிலேயே உட்கார்ந்து கொண்டு வீடியோவில் பேசுபவர்களுக்கு தெரியாது புரியாது என மதுரையில் ரோட்டரி சங்கம் சார்பில் கொரோணா பரிசோதனை கருவிகள் வழங்கும் நிகழ்வில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
செய்தியாளர். வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.