கடந்த 08.06.2020-ம் தேதி அரசு இராஜாஜி மருத்துவமனையில் முன்விரோதம் காரணமாக முருகன் என்பவர் கொலை செய்யப்பட்டார். மதிச்சியம் காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல் ஆய்வாளர் சக்கரவர்த்தி புலன் விசாரணை செய்ததில் கொலை செய்த நபர்கள் மதுரை மாநகர் கரும்பாலையை சேர்ந்த அருண்பாண்டி @ புக்குருட்டி 20, கரண்ராஜ் 20, சல்மான்கான் 20, தவசிபாண்டி 19, ராமச்சந்திரன் 19, விக்கி @விக்னேஸ்வரன் 19, ஆகிய ஆறு நபர்களையும் 09.06.2020-ம் தேதி கல்மண்டபத்தில் வைத்து கைது செய்தும் மற்றும் ஜெகதீஸ்வரன்@இருட்டு 19 மற்றும் ஒரு இளம்சிறார் ஆகிய இருவரையும் 10.06.2020 –ம் தேதி டாக்டர்.தங்கராஜ் சாலை அருகே வைத்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.