மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஒன்றியத்திற்குட்பட்ட திருவிளையாட்டம் ஊராட்சியில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவிளையாட்டம் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு ரூ. 22 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை அன்று பூம்புகார் சட்டமன்ற அஇஅதிமுக உறுப்பினர் எஸ். பவுன்ராஜ் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்வில் செம்பனார் கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தியாகராஜன் மற்றும் அருண் திருவிளையாட்டம் ஊராட்சி மன்ற தலைவர் சுகுணா கண்ணன், ஒன்றிய குழு உறுப்பினர் வெற்றி, ஊராட்சி மன்ற துணை தலைவர் ஜமுனாராணி பாபு, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி செயலர் மாலினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை செய்தியாளர்.


You must be logged in to post a comment.