திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை மாதத்திற்கு ஒரு முறை எண்ணப்படுவது வழக்கம். கடைசியாக கடந்த பிப்.18 ம் தேதி உண்டியல் திறக்கப்பட்டு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் மார்ச் 24 ம் தேதி மீண்டும்
எண்ணிக்கை நடைபெற இருந்த நிலையில் கொரானா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் கடந்த மூன்று மாதமாக நடைபெறாத உண்டியல் காணிக்கை தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. உண்டியல் காணிக்கைகள் திறக்கப்பட்டு எண்ணிக்கை நடைபெற்றது. இந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோயில் ஊழியர்கள் ஈடுபட்டனர். உண்டியலில் காணிக்கையாக 125 கிராம் தங்கம், ஒரு கிலோ 338 கிராம் வெள்ளி மற்றும் ரொக்கமாக ரூபாய் 18 லட்சத்து 79ஆயிரத்து 163 ரூபாய் இருந்ததாக கோயில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது .
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.