மதுரை நகரில் மகளிர் சுய உதவிகுழுவினர் பெற்ற கடனுக்கு வட்டி கேட்டு துன்புறுத்துவதாக, மதுரை சௌராஷ்டிராபுரம் மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.மதுரை வண்டியூர் சௌராஷ்டிராபுரம் ஏழாவது தெருவில் வசிக்கும் மகளீர் சுய உதவிக் குழுவினர், சிறுதொழில் கடன் பெற்று முறையாக நிலுவைத் தொகையை, உரியவரிடம் செலுத்தி வந்துள்ளனர்.இந்த நிலையில் கொரோனா பாதிப்பால், பெற்ற கடனுக்கு கடந்த சில மாதங்களாக செலுத்த முடியவில்லை என கூறப்படுகிறது.இந்த நிலையில், மகளிர் குழுவிலிருந்து , செலுத்த வேண்டிய நிலுவைத் தொகைக்கு, வட்டி கேட்டு துன்புறுத்துவதாக, வண்டியூரைச் சேர்ந்த பெண்கள் புகார் தெரிவித்தனர்.மத்திய நிதி அமைச்சகமே, கொரோனா காலத்தில் வங்கிக் கடனை வசூலிக்க கெடுபிடி கூடாது என்றும், தவணை முறையில் வசூலிக்கலாம் என, ஆலோசனை வழங்கப்பட்ட நிலையில், மதுரையில் மட்டும் மகளிர் சுய உதவிக் குழுக்களிடம் கெடுபிடி வசூலிக்கப்படுவதாகவும் இக்குழுவினர் புகார் தெரிவித்துள்ளனர்.இது குறித்து சுய உதவிக் குழு பெண்கள் மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய்யிடம் புகார் மனு அளித்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.