மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த முத்துசாமி 75 . முதியவர் காலை ஆட்டுக்குட்டிக்கு இலை ஒடிக்கும் போது தவறி விழுந்தார். கிணற்றில் தண்ணீர் இல்லாததால் குறுக்கு எலும்பில் பலத்த காயத்துடன் சத்தம் போட்டுள்ளார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக திருமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கவே அதன் குழுவினருடன் சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு துறையினர் 50 அடி பள்ளத்தில் இருந்த முத்துசாமியை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தீயணைப்பு துறை இணைந்து செயல்பட்டால் அவர் உயிருடன் மீட்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கதாகும்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.