நியாய விலைக்கடைகளில் டோக்கன் மூலம் முகக்கவசங்கள் வழங்க வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி.

மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் தையற்கலை தொழிலாளர்கள் சுமார் 300க்கும் மேற்பட்டோருக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையின் முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பின் சார்பாக ,கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ முகக்கவசம் மற்றும் சத்து மத்திரைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் வினய், மாநகராட்சி ஆணையாளர் விசாகன் , வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஆகியோரும் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில்

ஆண்டவன் மனிதனை படைக்கிறான். ஆனால் தையல் கலைஞர்கள் ஜென்டில் மேனை படைக்கிறார்கள் என தையல் கலைஞர்களுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ புகழாரம் தெரிவித்தார்.மதுரையில் கடந்த சில நாட்களாக கொரானா பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது வருத்தமளிக்கிறது.ஆலயங்கள் மூடப்பட்டுள்ளது ஆனால், அங்குள்ள தெய்வங்கள் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்கள். ஆண்டவனுக்கு இணையானவர்கள் மருத்துவர்கள். அதனால் ஆண்டவனே என்னை வணங்க வேண்டாம் மருத்துவர்களை வணங்குங்கள் என்றே கூறுவார். அந்தளவு கடுமையாக கொரானாவை விரட்ட உழைத்து வருகின்றனர்.

தமிழகம் இந்தியாவில் பிறந்த அனைவருக்குமே ஆண்டவன் நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையிலேயே கொடுத்திருப்பதால் கொரானா நம்மை அண்டவே அண்டாது.கொரானா குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு உருவாக்க வேண்டும்.கொரானா தடுப்பு பணியில் எந்த மாநில முதல்வரும் தமிழக முதல்வரை போல் செயல்படவில்லை. உலகத்திற்கே எடுத்துக்காட்டாக தமிழகம் திகழ்கிறது. கொரானாவை விரட்டுவதில் மதுரைக்காரர்கள் யார் என்பதை நிருபித்து காட்ட வேண்டும். (நடிகர் வடிவேலு பட பாணியில் படத்தில் வரக்கூடிய அந்த நகைச்சுவையை குறிப்பிட்டார்.)

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!