மதுரை மாவட்ட ஆட்சியாளரிடம் உடற்பயிற்சி நிலையங்களை திறக்க அனுமதி கோரி மனு

உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கோவிட் 19 வைரஸ் தொற்றை எதிர்த்து நமது அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் அனைத்தையும் எங்களது சங்கம் மனதார பாராட்டுகின்றது . மேற்படி வைரஸ் தொற்றின் காரணமாக அரசு உத்தரவின்படி கடந்த மார்ச் 16 ஆம் தேதி முதல் இன்றுவரை எங்களது உடற்பயிற்சி மையங்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது . இதனால் மதுரை நகரில் இயங்கி வந்த 140 உடற்பயிற்சி மையங்களின் வாழ்வாதாரங்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளது . உடற்பயிற்சி மையங்களை திறப்பதற்கான அனுமதி கோரிய மனுவை தங்களுக்கு கடந்த 15/05/2020 அன்றும் , இரண்டாவது மனு கடந்த 01/06/2020 அன்றும் தங்களிடம் சமர்ப்பித்திருந்தோம் . தாங்களும் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக கூறியிருந்தீர்கள் . தற்போது அனைத்து உணவகங்கள் மற்றும் காபி பார்களில் அமர்ந்து உணவருந்தவும் , டீ , காபி குடிக்கவும் , பெரிய துணிக்கடைகளை திறக்கவும் அரசு அனுமதி அளித்துள்ளது . உடற்பயிற்சி மையங்களை திரையரங்கம் , ஷாப்பிங் மால்கள் வரிசையில் ஒப்பிட்டு பார்ப்பது என்பது மலைக்கும் கடுகுக்கும் உள்ள வித்தயாசம் . பெரு நகரங்களில்தான் ஷாப்பிங் மால் மற்றும் திரையரங்களுடன் கூடிய ஸ்பாக்களுடன் உடற்பயிற்சிமையங்கள் பெயருக்கு இருக்கும் . 4000 முதல் 5000 சதுர அடிக்குமேல் பெரிய அளவில் இருக்கும் . தமிழகத்தில் அதுவும் மதுரையில் 1000 முதல் 1500 சதுரஅடி இடம் கொண்ட உடற்பயிற்சி மையங்கள் அதுவும் தனியாக செயல்படுகிறது . அதில் உடற்பயிற்சி சம்மந்தப்பட்ட பயிற்சிகள் மட்டுமே நடைபெறுகிறது . குளிர்சாதன வசதிகொண்ட உடற்பயிற்சி மையங்களும் குறைவே . எங்களது நிலைமையை தங்களுக்கு ஏற்கனவே தெள்ளத்தெளிவாக கூறியுள்ளோம் . மேற்படி எங்களது மையங்களில் இந்தியாவிற்கு பெருமை சேர்க்கக்கூடிய ஒலிம்பிக் விளையாட்டு போட்டியாளர்கள் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தனர் . ஊரடங்கு காரணத்தினால் அவர்களது பயிற்சி தடைபட்டுள்ளது . மேலும் உடற்பயிற்சி மையங்கள் அனைத்தும் படித்து வேலை வாய்ப்பற்ற கட்டிடங்களில் இயங்குகிறது . மேற்படி மையங்கள் மூடப்பட்டதால் கடந்த மூன்று மாதங்களாக வாடகை மற்றும் பயிற்சியாளர்களின் சம்பளம் , வங்கி கடன் தொகைக்கான மாதத் தவணைகள் செலுத்த இயலவில்லை . தற்போது எங்களது வேண்டுகோளை ஏற்று உடற்பயிற்சி மையங்களை திறக்க அனுமதி அளித்தால் அரசு விதிமுறைகளை ஏற்று மேலும் எங்கள் உடற்பயிற்சி மைய உரிமையாளர்கள் சங்கத்தின் கீழ்கண்ட விதிமுறைகளின்படி அனைத்து உடற்பயிற்சி மையங்களும் பயிற்சி அளிக்க உறுதி எடுத்துள்ளோம் . எங்களது பயிற்சி மையங்களின் விதிமுறைகள் : + பயிற்சி அளிப்பவர்கள் மற்றும் பயிற்சி பெறுபவர்கள் வெப்பமானி கொண்டு பரிசோதித்து , கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னரே பயிற்சி மையங்களுக்கு உள்ளே அனுமதிக்கப்படுவர் . + பயிற்சி பெறுபவர்களுக்கு தினசரி ஒரு மணி நேரம் மட்டும் பயிற்சி அளிக்கப்படும் . ஒரு மணி நேரத்திற்கு 10 நபர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு சமூக இடைவெளியை சீராக கடைபிடித்து பயிற்சி அளிக்கப்படும் . + முதல் சுற்று முடிந்தவுடன் உடற்பயிற்சி மையம் முழுவதும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்த பின்னரே சரியான இடைவெளிவிட்டு அடுத்த சுற்று நபர்கள் அனுமதிக்கப்படுவார்கள் . + பயிற்சி அளிப்பவர்கள் மற்றும் பயிற்சி பெறுபவர்கள் அனைவரும் கட்டாயமாக முக கவசம் , கையுறை , கிருமிநாசினி ( 50ml ) மற்றும் டர்கி டவல் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் . + பயிற்சிவறுபவர்கள் தனித்தனியாக தங்களுக்கென்று தண்ணீர் பாட்டில்கள் வைத்திருக்க வேண்டும் மேற்கண்ட விதிமுறைகளின் படி சமூகப் பொறுப்புடன் நடந்து கொள்வோம் . ஆகவே தாங்கள் தயவுகூர்ந்து பரிசீலித்து எங்களது மனுவை உடற்பயிற்சி மையங்களை திறக்க ஆவண செய்து எங்களது பாறாதாரத்தை மேம்படுத்த உதவுமாறு தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் என மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர் .

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!