மதுரை மாவட்டம் மேலூர் அடுத்த குருவார்பட்டி பகுதியில் ஒருவர் சிறுமிகள் ஆபாச படத்தை பதிவிறக்கம் செய்து பார்த்ததாகவும் அதன்பிறகு இதனை அவர் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்ததாகவும் மதுரை மாவட்ட சைபர் கிரைம் பிரிவு போலீசாருக்கு தகவல் வந்தன.இதனையடுத்து அவர்கள் மேற்கண்ட தகவலை மேலூர் போலீசுக்கு தெரிவித்தனர். இதன் அடிப்படையில் மேலூர் அனைத்து மகளிர் போலீசார் குருவார் பட்டியில் பதுங்கியிருந்த ஒருவரை கைது செய்து விசாரித்தனர்.போலீசாரின் விசாரணையில் அவர் புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தாலுகா, பாறைப்பட்டி பகுதியை சேர்ந்த மலைச்சாமி (வயது 34) என்பது தெரிய வந்தது.
இவர் கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி மேலூர் குருவார்பட்டியில் இருக்கும் மாமனார் வீட்டுக்கு வந்து உள்ளார்.அப்போது அவர் செல்போனில் ஆபாச படத்தை பார்த்து உள்ளார். அதன்பிறகு அவர் அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.இதையடுத்து மேலூர் அனைத்து மகளிர் போலீசார் மலைச்சாமியை கைது செய்து அவரிடம் இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.