கருணாநிதி படம் வைப்பது தொடர்பாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திமுக-அதிமுக மோதல்

திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி படம் வைப்பது தொடர்பாக தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வினரிடையே அடிதடி ஏற்பட்டது.திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கவுன்சில் கூடத்தில் முதல்வர் பழனிச்சாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஜெ. படம் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊராட்சி ஒன்றிய தலைவர் அறையில் இருந்த ஓ.பி.எஸ்., படத்தை கவுன்சில் கூடத்தில் வைக்க முடிவு செய்யப்பட்டது. அப்போது அங்கிருந்த தி.மு.க.,வினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்தை தாங்கள் வைக்க அனுமதிக்க வேண்டும் என்றனர்.

இந்நிலையில் கீழக்கோட்டை முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் தனுஷ்கோடி, ஊராட்சி தலைவர்களுக்கான கூட்டத்திற்காக தற்போது ஊராட்சிமன்ற தலைவராக உள்ள தனது மனைவியை அழைத்துக் கொண்டு அங்கு வந்துள்ளார். அப்போது அங்கிருந்த முன்னாள் ஒன்றிய தலைவர் தமிழகன் மற்றும் தனுஷ்கோடிக்கு இடையே படம் வைப்பது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறி அடிதடியில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானப்படுத்தினர். டி.எஸ்.பி., அருண் தலைமையில் போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!