அலங்காநல்லூர் அருகே அனுமதியின்றி மாட்டுவண்டி பந்தயம் நடத்த முயன்ற 13 பேர் கைது.. 4 மாட்டு வண்டி, 5 மினி வேன்கள் பறிமுதல்…

மதுரை மாவட்டம் அலங்காநல்லுார் அருகே 144 தடை உத்தரவை மீறி அனுமதியின்றி குமாரம், நகரி சாலையில் மாட்டுவண்டி பந்தயம் நடக்கப்போவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து எஸ்.ஐ.,இளங்கோவன் தலைமையில் போலீசார் விரைந்து சென்று சோதனை செய்தனர். அப்போது போட்டிக்கு தயாராக இருந்த நான்கு மாட்டு வண்டிகள், ஐந்து மினி சரக்கு வேன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் மாட்டு வண்டி போட்டிக்கான ஏற்பாடுகளை செய்த பரவை பகுதியை சேர்ந்த கார்த்திகேயன், ஜவஹர், மற்றும் ஆனையூர், கூடல்நகர் பகுதிகளை சேர்ந்த 13 பேரை போலீசார் கைது செய்தனர்…

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!