மின் கம்பம் முழுவதும் தனியார் பள்ளி விளம்பர பதாகை. அவதிப்படும் மின் வாரிய ஊழியர்கள்

மதுரை மாநகர் பைபாஸ் சாலை பழங்காநத்தம் அக்ரஹாரம் மாடக்குளம் மெயின் ரோடு பொன்மேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒரு தனியார் பள்ளி தனது விளம்பர பதாகைகளை அனைத்து மின் கம்பங்களும் வைத்துள்ளார்கள். இதனால் பழுது ஏற்படும் பொழுது மின்வாரிய ஊழியர்கள் மின் கம்பத்தில் ஏற முடியாமல் மிகவும் சிரமம் அடைகிறார்கள். ஏற்கனவே தமிழ்நாடு மின்சார வாரியம் மின் கம்பத்தில் எந்தவிதமான விளம்பர பதாகைகள் வைக்க தடை விதித்துள்ளது. அதையும் மீறி இவர்கள் பல பகுதிகளில் இவர்கள் பள்ளி விளம்பர பதாகைகளை வைத்துள்ளார்கள். இதுகுறித்து இவர்களின் விளம்பர பதாகை யால் வாகனத்தில் செல்வோர் மீது விழும் அபாயமும் உள்ளது. இதனால் மின்சார வாரியம் உரிய நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது. பெரும் அசம்பாவிதம் நடக்கும் முன் மின்கம்பங்களில் உள்ள விளம்பர பலகைகளை உடனடியாக அகற்ற மின்வாரியம் நடவடிக்கை எடுக்குமா என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கேள்வி எழுப்புகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!