பாலமேடு அருகே குடிபோதையில் தகராறு. நாட்டு வெடிகுண்டு வெடித்து வீட்டு நாய் தலை சிதறி சாவு – ஒருவர் கைது

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே ராமகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் சசிகுமார் இவரது மனைவி பெயர் செல்வராணி வயது (35). இவருடைய தம்பி முருகன் (30) மற்றும் அதே ஊரை சேர்ந்த சின்னதுரை (55) என்பவருடன் சேர்ந்து அடிக்கடி மது அருந்தி விட்டு அக்கா செல்வராணி வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளனர். இதற்கு செல்வராணி எதிர்ப்பு தெரிவித்ததால் சின்னதுரை தான் வீட்டில் வைத்திருந்த 4 நாட்டு வெடிகுண்டை எடுத்துவந்து செல்வராணி வீட்டின் மீது சரமாரியாக வீசியுள்ளார். அதில் ஒன்று வெடித்தும் மற்ற மூன்றும் வெடிக்காமல் போனது. அதில் ஒரு நாட்டு வெடிகுண்டை செல்வராணி வீட்டின் நாய் கடித்துள்ளது. அப்போது திடீரென வெடி வெடிக்க தலை சிதறி அந்த நாய் பரிதாபமாக இறந்தது. மீதமுள்ள 2 நாட்டு வெடிகுண்டுகள் அதே இடத்தில் கிடந்தன. இதுபற்றி உடனடியாக பாலமேடு போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் வெடிக்காமல் கிடந்த 2 நாட்டு வெடிகுண்டுகளையும் கைப்பற்றினர். மேலும் சம்பவம் நடந்த இடங்களில் தடயங்களை சேகரித்தனர். இதைத்தொடர்ந்து பாலமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து முருகன் என்பவரை கைது செய்தனர். மேலும் இதற்கு காரணமான சின்னத்துரை என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். தொடர்ந்து நாட்டு வெடி குண்டு எங்கிருந்து வாங்கி வந்தார் என்று விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது…

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!