சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவில் அமைந்துள்ள கீழடியில் தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பாக ஆறாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வந்தன.இதற்கிடையே கரோனா வைரஸ் தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் ஆறாம் கட்ட அகழாய்வுப் பணிகள் தற்காலிகமாக தமிழக தொல்லியல் துறையால் நிறுத்தி வைக்கப்பட்டன. ஏறக்குறைய இரண்டு மாதங்களுக்கு பிறகு கீழடி அகழாய்வு பணிகள் இங்கு துவங்கியுள்ளன.கீழடி கொந்தகை அகரம் ஆகிய
பகுதிகளில் தமிழக தொல்லியல் துறை சார்பாக நடைபெற்ற பணியானது இந்த ஊடரங்கிற்கு பிறகு இன்று துவங்கியது இந்த அகழாய்வில் பணிகளில் 18 நபர்கள் ஈடுபட்டு முக கவசம் அணிந்து போதிய இடைவெளி விட்டு அகழ்வாய்வு பணியை மேற்கொண்டு வருகிறார்கள் தமிழகத் தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தம் தலைமையில் இந்த அகழாய்வு பணியானது நடைபெற்று வருகிறது ஊரடங்கு உத்தரவு தளர்வு அறிவிக்கப்பட்ட நிலையில் 100 நபர்கள் வரையிலும் பணியில மாற்றிக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு பிறகு இப் பணியானது இன்று தொடங்கப் பட்டுள்ளது இந்த அகழாய்வு பணியானது பணியாளர்கள் மட்டுமே பணியை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது என அறிவித்துள்ளார்கள் கடந்த இரண்டு மாதங்களுக்கு பிறகு அகழாய்வு தொடங்கப்பட்டது பண்டைய தமிழ் பாரம்பரியத்தை பற்றி அறிய பேருதவியாக இருக்கும் என தமிழ் ஆர்வலர்கள் தகவல் தெரிவித்துள்ளார்கள் .
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









