மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் வசிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலை இன்றி தவித்து வரும் நிலையில் அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பும் பணிகளில் மதுரை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது,ஏற்கனவே பேருந்துகள் மூலமாக 3 கட்டமாக பல்வேறு வெளி மாநிலத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் ரயில் மூலம் முதல் கட்டமாக மதுரையிலிருந்து உத்திரபிரதேச மாநிலம் கசன் கோடிற்கு சிறப்பு ரயில் மூலம் இன்று 4 மணியளவில் சிறப்பு ரயில் மூலம்அனுப்பி வைக்கப்பட்டனர். ,இதில் மதுரை மாவட்டத்திலிருந்து 1181 பேரும்,தேனி மாவட்டத்தைச் சேர்ந்த1297 பேரும்,தேனி
மாவட்டத்திலிருந்து 174 பேரும்,விருதுநகர் மாவட்டத்திலிருந்து125 பேரும்,திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து 120 பேர் என மொத்தம் 1600 பேர் அனுப்பி வைக்கப்பட்டனர். முன்னதாக அனைவரும் தாங்கள் பணிபுரிந்த இடங்களிலிருந்து 32 அரசு பேருந்துகள் மூலம் அழைத்து வரப்பட்டு 10 இடங்களில் அவர்கள் தற்காலிகமாக காத்திருக்கும் முகாம் அமைத்து அவர்களுக்கான மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது ,இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் வினய் பார்வையிட்டார். அதன் பின் அவர் மேற்கு வங்காளம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு செல்வதற்காக விருப்பம் தெரிவித்து பதிவு செய்துள்ள நிலையில் அந்த மாநிலங்களின் ஒப்புதல் கிடைத்தவுடன் அந்தந்த மாநில புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்படும் எனவும் வரும் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் சிறப்பு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்,இவர்கள் அனைவரும் உத்திர பிரதேச மாநிலம் கசன் கோடு ரயில் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து சிறப்பு வாகனங்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இவர்களுக்கு மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில், தண்ணீர், உணவு பொட்டலங்கள் வழங்கி அனுப்பி வைக்கப்பட்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









