மதுரை செல்லுார் எஸ்.ஐ., தியாகப்ரியன் கணேசபுரம் பகுதியில் ரோந்து சென்றார்.அப்போது , தி.மு.க., 9வது வார்டு இளைஞரணி செயலாளர் சந்துரு, சேகர், ரமேஷ் ஆகிய 3 பேரும் அந்த பகுதியில் நின்று பேசிக் கொண்ருந்தனர்.அப்போது தியாகப்ரியன் வீட்டிற்கு சென்று பேசுங்கள் என எச்சரித்தார். இதனால் எஸ்.ஐக்கும் – அவர்களுக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்டு, இருவரும் கைகலப்பில் ஈடுபட்டனர்,இதில் எஸ்.ஐ. தியாகப்ரியன் காயம்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்தநிலையில் சந்துரு உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.