மதுரை ரயில்வே ஜங்ஷன் சரியான நேரத்திற்கு ரயில்கள் இயக்கம் சிறந்த பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்காக ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஜங்ஷன் வழியாக தினமும் 90க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. மதுரை ரயில்வே ஜங்ஷனில் உள்ள முதல் பிளாட்பாரத்தில் பல்வேறு வசதிகளுடன் கூடிய குளிரூட்டப்பட்ட பயணிகள் ஓய்வு அறை/ இரண்டாம் வகுப்பு பயணிகள் காத்திருப்பு அறை பார்சல் அலுவலகம் ஆகியன உள்ளன. ஆறு ரயில் பாதை வழியாக ரயில்கள் இயக்கப்படுகின்றன. தெற்கு ரயில்வேக்கு கணிசமான
வருவாயை ஈட்டித் தருவதில் மதுரை கோட்டம் முதலிடத்தில் உள்ளது. தற்போது ஜங்ஷன் மெயின் நுழைவு வாயிலை அழகுபடுத்தும் பணி நடந்து வருகிறது . இந்நிலையில் ரயில்வே ஸ்டேஷனுக்கு ஐஎஸ்ஓ தர சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.சரியான நேரத்திற்கு ரயில்கள் இயக்கம் சிறந்த சிக்னல், தொலைத்தொடர்பு,ஸ்டேஷன் பராமரிப்பு, பயணச்சீட்டு, முன்பதிவு சரக்குகளை கையாளும் முறை, சிறந்த சுற்றுச்சூழல் ,சுத்தம், போன்ற பல விஷயங்களுக்காக இந்த தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அதிகாரி தெரிவித்தார்
.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.