மதுரை அருகே வாகன சோதனையில் சிக்கிய கஞ்சா. ஒருவர் கைது

திருப்பரங்குன்றம் அருகே வடபழஞ்சி பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த கஞ்சா வியாபாரியை மடக்கிப் பிடித்த போலீசார். இரு சக்கர வாகனம் உள்பட 1.5 கிலோ கஞ்சா பறிமுதல்.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வடபழஞ்சி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் அருகே நாகமலை புதுக்கோட்டை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மலர் ராஜன் என்பவர் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்தார் போலீசார் அவரிடம் சோதனை செய்தபோது சுமார் ஒன்றரை கிலோ எடையுள்ள 70 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சாவை வைத்திருந்தது தெரியவந்தது.இதனையடுத்து நாகமலைபுதுக்கோட்டை போலீசார் அவரிடம் விசாரணை செய்ததில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.போலீஸார் மலர் ராஜனை கைது செய்து.அவரது வாகனம் மற்றும் 1.5 கிலோ கஞ்சர பறிமுதல் செய்யப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!