மதுரை மாவட்டம் பழங்காநத்தம் அக்ரஹாரம் பகுதியில் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அப்பகுதி இதனையடுத்து அப்பகுதி முழுவதும் தடுப்பு வேலிகள் அமைத்து வெளி ஆட்கள் உள்ளே வராமலும் உள்ளே இருக்கும் நபர்கள் வெளியே செல்லாமல் தடுப்புகள் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் இன்று சிறப்பு அதிகாரி அம்பிரித் IAS பகுதியை ஆய்வு செய்தார் உடன் மதுரை மாநகராட்சி 76 வது வார்டு அதிகாரி விஜயகுமார் மற்றும் சுகாதார ஆய்வாளர் சுப்புராஜ் மற்றும் சிவசுப்பிரமணியம் ஆகியோர் உடன் இருந்தனர். தளர்வு சிறப்பு அதிகாரி குறித்து ஆய்வு மேற்கொண்ட மேலும் ஒரு வாரம் கழித்து தளர்வை மேற்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார் .அதிகாரிகளிடம் அடிக்கடி கிருமிநாசினி பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ளவும் கபசுரக் குடிநீர் வழங்கும் உத்தரவிட்டுள்ளார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.