ஆயிரம் ரூபாய் கொடுத்து அரசு போக்குவரத்து கழகத்தில் மாதாந்திர பாஸ் எடுத்த கூலித் தொழிலாளர்கள் எடுத்த ஒரு வாரத்திலேயே ஊரடங்கு உத்தரவு மீண்டும் செல்லுமா பணத்தை இழந்து இருக்கும் கூலித் தொழிலாளர்கள். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக ரூபாய் 1000 செலுத்தி ஒரு மாதத்திற்கு நகரப் பேருந்தில் எங்கு சென்றாலும் எத்தனை முறை வேண்டுமானாலும் சென்று வரலாம் இதன் அடிப்படையில் பல கூலித் தொழிலாளர்களும் மற்றும் மார்கெட்டிங் தொழில் செய்யும் நபர்களும் இந்த பஸ் பாஸ் களை எடுத்து வைத்து உள்ளார்கள். 16/03/2020 முதல்15/04/2020 ஆயிரம் கொடுத்து பஸ் பாஸ் கொடுத்து எடுத்துள்ளார்கள். கொரோனா தொற்று காரணமாக மார்ச் மாதம் 23ஆம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் அனைத்து நாடு முழுவதும் அனைத்து பேருந்துகளும் நிறுத்தப்பட்டது. இதனால் பஸ்பாஸ் எடுத்தவர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. மே மாதம் 18 தேதி நகரப் பேருந்து தொடங்கினால் இந்த பஸ் பாஸ் செல்லுபடி ஆகும்படி அரசு போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஏற்கனவே கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு எங்களுக்கு வருமானம் இல்லை எனவும் பலரும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மார்ச் மாதம் முதல் ஏப்ரல் வரையிலான பஸ் பாஸ் செல்லுபடியாகும் என அறிவிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.