நடத்தையில் சந்தேகம். தங்கை சரமாரி வெட்டிக்கொலை. அண்ணன் வெறிச்செயல்

மதுரை மேலவளவு அடுத்த கீழப்பட்டியைச் சேர்ந்த மோகன் மனைவி சகுந்தலா (வயது 26). இவர்களுக்கு சேதுபதி (9), காமாட்சி (7) என்று இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.சகுந்தலாவும் மோகனுக்கும் இடையில் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. இதனால் சகுந்தலா கணவரை பிரிந்து  கடந்த 5 ஆண்டுகளாக தாய் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.இந்த நிலையில் சகுந்தலா அதே பகுதியில் வசிக்கும் ஒருவருடன் நெருங்கிப் பழகி வந்தார். இதனை அவரது அண்ணன் சௌந்தரபாண்டியன் (வயது 30) தட்டிக் கேட்டார்.இருந்தபோதிலும் சகுந்தலா கேட்கவில்லை.இதனால் தங்கைக்கு அந்த வாலிபர் உடன் கள்ளத்தொடர்பு இருக்குமோ? என்ற சந்தேகம் ஏற்பட்டது.இந்த நிலையில் சௌந்தர பாண்டியனுக்கும் சகுந்தலாவுக்கும் மேற்கண்ட விவகாரம் தொடர்பாக இன்று அதிகாலை ஒரு மணி அளவில் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சகுந்தலா அண்ணனை மரியாதை குறைவாக பேசியதாக தெரிகிறது.இதனால் ஆத்திரமடைந்த சௌந்தரராஜன் அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் சகுந்தலா படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக பலியானார்.இது தொடர்பாக மேலவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தங்கை சகுந்தலாவை கொலை செய்ததாக, அண்ணன் சௌந்தரபாண்டியனை மேலவளவு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!