மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே நிலையூரில் கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில் பத்தடி ஆழத்தில் எருமைமாடு தவறி விழுந்தது. மாட்டின் உரிமையாளர் மற்றும் பொதுமக்களும் அதை மீட்க முயற்சி செய்தனர். எனினும் அவர்களால் மீட்க முடியவில்லை. உடனடியாக மதுரை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததை சம்பவ இடத்திற்கு விரைந்த நிலை அலுவலர் வெங்கடேசன் குழுவினர் எருமை மாட்டை மீட்க ஜேசிபி மற்றும் கல்லுடைக்கும் இயந்திரம் கொண்டு சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பின் உயிருடன் மீட்கப்பட்டு உரிமையாளர் வசம் ஒப்படைக்கப்பட்டது. துரிதமாக செயல்பட்டு தீயணைப்பு துறையினருக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.