திருப்பரங்குன்றம் அருகில் உள்ள திருநகர் முதல் பஸ் ஸ்டாப் அருகில் உள்ளது டாஸ்மாக் கடை. இந்த கடைக்கு பகல் ஒரு மணியளவில் ஜோதி,அமுதா, ஜெகதீஸ்வரி ஆகிய மூன்று பேரும் சமூக இடைவெளியுடன் வந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்த மதுக்கடையில் மது வாங்க சென்றனர். அப்போது அங்கு பாதுகாப்பில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்கள் போலீசாரிடம் அரசுக்கு மது விற்பனை செய்ய உரிமை உள்ளது. குடி மக்களான எங்களுக்கு ஜனநாயக நாட்டில் மதுக்கடையில் மது வாங்க உரிமை உள்ளது எங்களை அனுமதிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.
அதன் பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஜெகதீஸ்வரி தனது ஆதார் அட்டையுடன் சென்று இரண்டு குவார்ட்டர் வாங்கி வந்தார். அதன் பின்னர் அவர்கள் அந்த மது பாட்டில்களை திறந்து அதில் இருந்த மதுவை சாக்கடையில் ஊற்றினர். மேலும் கொரானா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில் தமிழக அரசின் நடவடிக்கையால் மேலும் கொரானா பரவல் அதிகரிக்கும் என கூறி தமிழக அரசை கண்டித்து கோஷஙகளை எழுப்பினர். இதனால் இப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்





You must be logged in to post a comment.