அலங்காநல்லூர், குலமங்கலம் அடுத்த எழும்பூரை சேர்ந்தவர் முத்தமிழ்செல்வன் (வயது 51). இவர் நேற்று அங்குள்ள கண்மாய் அருகே படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்.அப்போது யாரோ மர்ம நபர்கள் அவரை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பி சென்று விட்டனர்.இந்த நிலையில் அங்கு உள்ள சிலர் கண்மாய்க்கு இன்று காலை சென்ற போது முத்தமிழ்செல்வன் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.இதுதொடர்பாக அலங்காநல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் பேரில் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.முத்தமிழ் செல்வனுக்கும் அங்குள்ள சிலருக்கும் இடையில் கண்மாய் மீன் பிடி குத்தகை தொடர்பாக ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது.இதன் காரணமாக முத்தமிழ்செல்வன் கொலை செய்யப்பட்டாரா, அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது தொடர்பாக அலங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
.வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.