கொரோனா நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்ட நிலையில் இருந்து மதுரையில் 5 லட்சத்து ஆயிரத்து 13 நபர்கள் நேற்று வரை அம்மா உணவகம் மூலம் பயன் அடைந்திருக்கிறார்கள்.82 ஆயிரத்து 270 முட்டைகள் வழங்கப்பட்டிருக்கிறது.தமிழகத்தில் வசித்துக் கொண்டிருக்கும் மது பிரியர்கள் கால்கடுக்க நடந்து சென்ற அடுத்த மாநிலத்தில் சென்று மது அருந்துகிறார்கள்.தமிழகத்தின் பொருளாதார நிதி நிலையை அனைவரும் நன்கு அறிய வேண்டும்.விலைவாசி தமிழகத்தில் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.கமல்ஹாசன் எந்த உலகத்தில் இருக்கிறார் என்று தெரியவில்லை, உயிர்பலி கம்மியாக இருப்பது தமிழகத்தில் மட்டுமே,தமிழகத்தில் மட்டுமே நோயை கட்டுப்படுத்தி உள்ளோம். .திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் எதிர்கட்சிகள் நானும் இருக்கிறேன் நானும் ரவுடிதான் நானும் ரவுடி தான் என நடிகர் வடிவேலு கூறுவது போல் அவரும் நானும் அரசியல் களத்தில் இருக்கிறேன் என்று உணர்த்துவதற்காக இவ்வாறு கூறுகிறார்
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.