தேசிய செட்டியார் பேரவை சார்பாக இதுவரை சுமார் ஒரு கோடி ரூபாய் அளவிற்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கபட்டுள்ளது – தேசியப் செட்டியார் பேரவையின் தலைவர் பேட்டி

0கொரோனா வைரஸின் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுள்ள நிலையில் கொரோனா தடுப்பு நிவாரண பணிக்காக தேசிய செட்டியார்கள் பேரவை மற்றும் பாலமுத்தழகு குழுமம் சார்பாக செல்லூர் பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு தேவையான, கபசுர குடிநீர், அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் விழா நடைபெற்றது,இந்த நிகழ்ச்சில் கலந்துகொண்டதேசிய செட்டியார் பேரவை நிறுவனத் தலைவர் பிஎல்ஏ ஜெகத் மிஸ்ரா அவர்கள் தலைமையில் ஏழை எளிய மக்களுக்கு தேவையான அரிசி பருப்பு காய்கறி என 19 வகையான பொருட்கள் மற்றும் அத்தியாவசிய தேவைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது,அதனை தொடர்ந்து செய்தியார்களை சந்தித்த அவர் பேசுகையில்,

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது,மேலும் வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க பெருமுயற்சி எடுத்து வரும் நிலையில் தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு எங்களுடைய பேரவை சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம், மேலும் தடுப்பு பணிக்காக இதுவரை சுமார் ஒரு கோடி அளவிற்கு நிவாரண பொருட்கள் ஏழை எளிய மக்களுக்கு எங்கள் பேரவை சார்பாக வழங்கப்பட்டுள்ளது, மேலும் தடுப்பு பணிக்காக எங்களுடைய நிறுவனம் மற்றும் பேரவை சார்ந்த 9 வாகனங்களை பயன்படுத்த மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்கி உள்ளளோம்., அதனை ஏற்று எங்களுடைய வாகனத்தை தடுப்பு நடவடிக்கைக்கு பயன்படுத்துவார்கள் என நம்புகிறோம் என தெரிவித்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!