மதுரை மாவட்டம் பழங்காநத்தம் அக்ரஹாரம் பகுதியில் காவல்துறை ஒருவருக்கு தோற்று உறுதியானதை அடுத்து அந்தப் பகுதியானது தடை செய்யப்பட்ட பகுதியாக மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக அறிவிக்கப்பட்டது. மேலும் அந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஒவ்வொரு வீட்டுக்கும் கபசுர கசாயம் ஒவ்வொரு வீட்டுக்கும் நேரடியாகவே வழங்கப்பட்டது. இதில் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து அவர்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டு வாசலிலிருந்து வாங்கிச் செல்லுமாறு கேட்டுக் கொண்டனர். இதனை தொடர்ந்து அவர்கள் வீட்டு வாசலிலிருந்து அப்பகுதி மக்கள் கசாயத்தை வாங்கி அருந்துகின்றனர். மேலும் அவர்களுக்கு தேவையான உணவு அம்மா உணவகத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட இலவசமாகவே மூன்று வேளையும் கொடுக்கப்படுகிறது. இதில் குறிப்பாக தன்னார்வலர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு மதுரை அரசு மருத்துவமனை சார்பாக எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாத்திரைகள் வழங்கப்பட்டது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.