முழு ஊரடங்கு உத்தரவு. அம்மா உணவுகளைத் தேடி வந்த பொதுமக்கள்

மதுரை மாவட்டத்தில் நான்கு நாட்களுக்கு முழு அடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையில் அனைத்து அத்தியாவசிய கடைகளும் அடைக்கப்பட்டு உள்ளது. மேலும் சாலையோரம் இல்லாத நபர்களும் ஆதரவற்றோருக்கும் அம்மா உணவகங்களை நம்பியே உள்ளார்கள் .தற்பொழுது அம்மா உணவகத்தில் மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்கப்படுகிறது. காலை இட்லி. பொங்கல் சாம்பாருடன் வழங்கப்படுகிறது. மதியம் சாம்பார் சாதம் தயிர் சாதம் மற்றும் ஒரு முட்டையுடன் வழங்கப்படுகிறது. இரவு கிச்சடி அல்லது உப்புமா ஆகியவை இலவசமாக வழங்கப்படுகிறது. மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இங்கு உணவு உண்ணுவதற்கு அனுமதி இல்லை. பார்சலாக மட்டுமே வாங்கி செல்ல அனுமதிக்கப்பட்டார்கள். உத்தரவு காரணமாக பலர் வரிசையில் நின்று பார்சல்களை வாங்கி சென்றனர். தினசரி சுமார் 400 மேற்பட்டோர் மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் மூன்று வேளையும் உணவுகள் வாங்கி செல்வது என்பது குறிப்பிடத்தக்கதாகும் .

செய்தியாளர். வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!