திருச்சி மாவட்டம்¸ மணப்பாறை காமராஜர் சிலை சோதனைச்சாவடியில் காவலர் சையது அபுதாகீர் பணியில்
இருந்த போது அந்த வழியாக சோகத்தோடு நடந்து வந்த இரட்டியப்பட்டியை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியான .சுலோச்சனா அவரது கணவரையும் அமர வைத்து ஏதேனும் உதவி தேவையா என்று விசாரித்தார். அப்போது¸ சுலோச்சனாவிற்கு அறுவை சிகிச்சையின் போது ஏற்படும் இரத்த இழப்புக்கு ஈடாக¸ ஏதேனும் வகை இரத்தம் ஏற்பாடு செய்து வர மருத்துவ நிர்வாகம் சொன்னதாக கூறியுள்ளார்கள். இதை கேட்டறிந்த காவலர், தனது அலுவல் முடிந்த உடனே, அவர்களை மணப்பாறையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று அவருக்கு தேவையான இரத்தத்தை தானே கொடுத்துள்ளார். மாலையில்¸ நடைபெற்ற அறுவை சிகிச்சையில் சுலோச்சனாவிற்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தக்க சமயத்தில் உதவிய காவலரை¸ அனைவரும் வெகுவாக பாராட்டினார்கள்.
வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









