மதுரை மாவட்டத்தில் மீன்,இறைச்சி விற்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் டி.ஜி.வினய் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
உலகெங்கும் பரவியுள்ள கொரோனா வைரஸ் நோயை தடுப்பதற்காக உலகநாடுகள் மக்களை காக்கும் பொருட்டு போராடி
வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டில் அந்த பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் பாதுகாப்பாக தங்கு தடையின்றி கிடைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சில இடங்களில் சமூக இடைவெளி இல்லாமல் பொதுமக்கள் கூட்டமாக நின்று கடைகளில் பொருட்களை வாங்கி வருகிறார்கள். சமூக இடைவெளியை பின்பற்றாத கடைகளுக்கு உரிமம் ரத்து செய்யப்பட்டு சீல் வைக்கப்படுகிறது. போதிய சமூக இடைவெளி விட்டு குறிப்பிட்ட நேரத்தில் அத்தியாவசியமாகத் தேவைப்படும் பொருட்களை வாங்க வேண்டும்.எனவே மதுரை மாவட்டத்தில் வைரஸ் நோயை தடுப்பதற்காக நாளையும் (5/4/2020) நாளை மறுநாளும் (6/4/2020) மீன்,இறைச்சி கடைகளை திறப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது என மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கீழை நியூஸுக்காக மதுரை கனகராஜ்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









