சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள சக்குடி கிராமம்அனஞ்சியூர் அருகில் மதுரை அரசு மருத்துவமனை சிறப்பு மருத்துவர் சையது தோட்டம் ஒன்று உள்ளது. இந்த தோட்டத்தில் உள்ள கிணற்றில் கொடிய விஷத்தன்மை கொண்ட கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று காலை கிணற்றில் தவறி விழுந்ததாக இயற்கை தாகம் அமைப்பை சேர்ந்தவர்களுக்கு தகவல் வந்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த சீனிவாசன், சரவணன், செல்லப்பா, ஆகியோர் லாவகமாக இறங்கி மிகவும் கவனமாக சுமார் 5 அடி நீளம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்பை பிடித்து வனத்துறையின் அறிவுறுத்தலின் பேரில் அடர்ந்த வனப்பகுதியில் பத்திரமாக விட்டனர் .மேலும் இயற்கை தாகம் அமைப்பினர்
சீனிவாசன் கூறுகையில் இந்த பாம்பானது 2 அல்லது 3 நாட்களுக்கு முன் கிணற்றில் தவறி விழுந்து இருக்கலாம் எனவும் பாம்பை கண்டால் தயவு செய்து யாரும் அடிக்கவோ அதை அச்சுறுத்தும் வகையில் துன்புறுத்தவோ செய்ய வேண்டாம் எனவும் பாம்பு இருக்கும் இடத்தை எங்களிடம் தகவல் தெரிவித்தால் நாங்கள் வந்து பத்திரமாக அதை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட்டுவிடுவோம் பாம்பு நம்மை ஒன்றும் செய்யாது எனவும் தெரிவித்தார். அதனால் பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்று சொல்வார்கள் ஆனால் நீங்கள் அச்சப்பட வேண்டாம் பாம்பு விவசாயிகளின் காவலன் என்று நினைத்து பாம்பை அடிக்காமல் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.