கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாளை மக்கள் ஊரடங்கு உத்தரவு நடத்த வேண்டும் என பாரதப் பிரதமர் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனைத்தொடர்ந்து மதுரை மாநகராட்சி ஆணையாளர் விசாகன் உத்தரவின் பேரில் மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள வெற்றிவேல் திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமண மண்டபங்களில் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள் கலந்து கொண்ட உறுதிமொழி ஏற்றனர் நாளை முகூர்த்த நாள் என்பதால் திருமண மண்டபங்களில் நாளை நடக்கும் திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் கூட்டம் சேரா வண்ணம் இருக்கவேண்டும் என திருமண மண்டப உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள் மற்றும் ஆலோசனைக் கூட்டம் மதுரை மாநகராட்சி சார்பாக நடைபெற்றது. இதில் நாளை 22.03.2020 நடைபெற உள்ள திருமண நிகழ்ச்சிகள் மற்றும் சுபநிகழ்ச்சிகளில் கூட்டம் அதிக அளவில் சேராமல் இருக்கவும் முடிந்தளவிற்கு நாளை நடைபெறும் நிகழ்ச்சிகளை ரத்து செய்யுமாறு அல்லது கூட்டம் அதிக அளவு சேரா வண்ணம் கேட்டுக் கொண்டனர். இதில் மதுரை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் முருகன் மதுரை மாநகராட்சி மருத்துவர் வேல்விழி அவர்கள் உதவி பொறியாளர் முருகன் மற்றும் சுபா ஆகியோர் கலந்துகொண்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். கொரொன வைரஸ் பரவுவதை தடுக்க ஒத்துழைப்பு தர வேண்டும் வேண்டுமெனவும் மாநகராட்சி சார்பில் வேண்டுகோள் வைத்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.