கார் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் கணவன் மனைவி பலி

மதுரை மாவட்டம் தனக்கன்குளம் அருகில் நான்கு வழி சாலையில் கார் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் கணவன் மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.வில்லாபுரத்தை சேர்ந்தவர் கண்ணன் (50) இவருடைய மனைவி வசந்தி(43) இருவரும் நான்கு வழிச் சாலையை கடக்கும் போது திருமங்கலம் நோக்கி சென்ற கார் பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் கணவன் மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். தகவலறிந்த ஆஸ்டின்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நேதாஜி ஆம்புலன்ஸ் மூலமாக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கணவன் மனைவி இருவரும் வாகன விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!