மூன்றாம் உலகப்போரை காட்டிலும் கொடுமையான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் நிலையில் முக்கியமான மதுரையில் முக்கியமான வழிபாட்டுத் தலங்கள் மூடல். கொரோனா வைரஸ் எதிரொலியாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கூடல் அழகர் பெருமாள் கோவில் அழகர் கோவில் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் பழமுதிர்ச்சோலை உள்ளிட்ட முக்கியமான வழிபாட்டுத் தலங்கள் வரும் மார்ச் 31-ஆம் தேதி வரை மூடப்படுகிறது. பக்தர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. வழக்கம்போல் உள்ளே ஆறு கால பூஜைகள் நடைபெறும் எனவும் பக்தர்கள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் கோவில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.